மதுரையில் இருந்து தெற்கே சுமார் 9 கி.மீ. தொலைவில் உள்ளது.
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதலாவதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த மலை 1050 அடி உயரம் கொண்டது. மலை அடிவாரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. 49 படிகள் உள்ளது.
தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். இங்கு ஆறுமுகப்பெருமான் இடது காலை மடித்து வலது காலை தொங்கவிட்டு வீற்றிருக்க இடதுபுறம் தெய்வானையும், வலதுபுறம் நாரதரும் அமர்ந்துள்ளவாறு காட்சி தருகின்றார்.
இத்தலத்தில்தான் முருகப்பெருமான் தேவேந்திரனின் விருப்பத்திற்கிணங்க தெய்வானையை பங்குனி உத்திர நன்னாளில் திருமணம் செய்து அருளினார். இந்த வைபவம் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
மலையின் உச்சியில் இரு பாறைகளுக்கு இடையில் சிக்கந்தர் பாஷா என்ற முகம்மதிய பெரியவரின் சமாதியும் மண்டபமும் உள்ளது. |